நாம் யார்? ஒளியின் பிள்ளைகள்! 

யேசுவின் போதனைகளை உண்மையாக கைக்கொள்ளுபவர்கள் எம்மில் அடங்குகின்றனர்! 

சுவிசேஷம் என்பது கிறிஸ்துவினுடையது! இதை புரிந்துகொள்பவர்களுக்கு சொல்கிறேன்!
நீங்கள் தான் அந்த "நாம்" !  எம்மைப்பற்றி என்பது உங்களைப்பற்றியே!

நாம் கிறிஸ்துவின் சாயலாக இருக்கிறோமே! கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறோமே! உலகத்தின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், இயேசுவுக்காக உண்மையாக இருந்தால்; நானும், நாமும்,  நீங்களும் வேறல்ல! 

தற்சமயம் உங்களில் ஒருவனாகிய நானும், இன்னும் ஒருசில சகோதர்களும் இணைந்து 
இங்கே சுவிஸ் தேசத்தில் எங்களை அழைத்த தேவனுக்காக சில ஊழியங்கள் செய்கிறோம். 

  • யேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உண்மையுடன் நேசித்து உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்களுக்கு அறிவிப்பது!
  • ரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது!
  • வேதாகமத்தை புரிந்துகொள்ள உதவுவது! கற்றுக்கொடுப்பது!
  • ஜெபக்குழுக்கள் நிறுவுவது !
  • ண்மையாக ஊழியம் செய்ய விரும்புகிறவர்களை ஊக்குவிப்பது !
  • தி அன்பை விட்டு தொலைந்து போயிருக்கும் சபைகளை மீண்டும் கிறிஸ்துவின் போதனைகளின்படி உயிர்பெற செய்வது!

 

"இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்" யோவான் 7:37-38

.